ரஷ்யாவில் 15 ஆண்டுகள் சிறை!! சேவைகளை நிறுத்திவிட்டு ஓடும் மேற்குலக ஊடகங்கள்!!


உக்ரைனில் ரஷியா தாக்குதல் நடத்தத்தொடங்கியதில் இருந்து ரஷ்யாவில் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் செய்தி நிறுவனங்களும் அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வந்தன. 

அதேபோன்று சமூக ஊடங்களான பேஸ்புக் , ருவிட்டர் போன்ற பிற ஊடகங்கும் ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. 

இதனால் சமூக ஊடகங்களான பேஸ்புக், ருவிட்டர் என்பன ரஷ்யாவில் பார்வையிடுவதற்கு ரஷ்யா தடை செய்யப்பட்டுள்ளது.

ரஷ்ய படைகள் குறித்து போலிச் செய்திகளை வெளியிட்டு வருவதால் அதனைத் தடுக்க ரஷ்ய நாடாளுமன்றில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் ரஷ்யப் படைகள் குறித்து போலிச் செய்திகள் வெளியிட்டால் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் புதிய சட்டம்  கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனையடுத்து பி.பி.சி, சி.என்.என் போன்று நிறுவனங்களும் தங்கள் சேவையை இடைநிறுத்தியுள்ளன.

No comments