இந்திய தூதரும் வருகிறார்:ஒன்றோடு ஒன்றானோம்!

புதிதாக யாழ்ப்பாணம் கந்தரோடையில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு மகிந்த இன்று பயணிக்கவுள்ள நிலையில் இந்திய தூதரரும் சிறப்பு விருந்தினராக பங்கெடுக்கவுள்ளார்கந்தரோடையில் அமைக்கும் விகாரைக்கு இந்தியத் தூதுவரும் அழைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மக்களிற்குச் சொந்தமான நிலத்தை இரகசியமாக வாங்கி விகாரை  அமைக்க முற்படும் பிரதேசத்திற்கு இன்று மாலை பிரதமர் மகிந்த ராஜபக்ச வருகை தரவுள்ளார்.

இவ்வாறு பிரதமர் வரும் நிகழ்விற்கு யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதுவரும் அழைக்கப்பட்டுள்ளார்.

இதனால் சர்ச்சைக்குரிய பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்பும் பதிவு செய்யப்படவுள்ள நிலைமையில் யாழிழ் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் கலந்துகொள்வாரா என கேள்வி எழுப்பப்படுகின்றது.

No comments