ஆளே இல்லாத தேனீர் கடைகள் மும்முரம்!
ஆளே இல்லாத கடைகளில் தேனீர் ஆற்றுவதில் தமிழ் அரசியல் கட்சிகள் வடகிழக்கில் மும்முரமாகியுள்ளன.
இலங்கை பிரதமர் வருகையை முன்னிட்டு யாழ் மாவட்டச் செயலகத்தை முடக்கிப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தது முன்னணி கட்சியொன்று.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும், பயங்கரவாதச் சடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், வடக்கு – கிழக்கில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுவரும் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்களைக் கண்டித்தும் யாழ். மாவட்ட செயலகம் முன்பு இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் மஹிந்த ராஜபக்யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் அவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றதென விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
எனினும் சனிக்கிழமை விடுமுறை தினமாகையால் மாவட்ட செயலகம் மூடப்பட்டிருந்ததுடன் புமகிந்த மதியத்தின் பின்னரே யாழ்.நகரிற்கே வருகை தந்திருந்தார்.
ஆனால் முன்னணி கட்சியின் தலைவர்கள் தமது சிறுகுழுவினருடன் மாவட்ட செயலகம் முன்னதாக புகைப்படமெடுத்த பின்னர் கலைந்து சென்றுவிட்டனர்.
வெறுமனே செய்திகளில் மட்டுமே கவனயீர்ப்பு போராட்டம் வெளிவந்ததுடன் மகிந்த எதிர்ப்பு முடிவுக்கு வந்திருந்தது.
Post a Comment