பகலில் இந்தியா:இரவில் சீனா?இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.

கடன்களை செலுத்துவதை ஒத்திவைப்பது தொடர்பிலும்,அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் இறக்குமதிக்கான கடன் உதவி குறித்தும் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வருடம் சீன வங்கிககளிற்கு இலங்கை 100 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக செலுத்தவேண்டும்.

நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீளும் வரை இந்த கடன்களை செலுத்துவதை ஒத்திவைக்கவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இலங்கையின் உள்ளுர் தொழில்துறை தொடர்ந்து இயங்குவதற்கு அவசியமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அவசியமாக கடன் உதவியை சீனாவிடமிருந்து இலங்கை கோரியுள்ளது.

இலங்கை மேலதிக நிதிஉதவியை கோரியுள்ளது இரு தரப்பும் இது குறித்து ஆராய்கின்றன என்பதை உறுதி செய்ய முடியும் என சீன தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்தியா  இலங்கைக்கு வழங்கிய ஒரு பில்லியன் டொலர் அமெரிக்கா டொலர் நிதியுதவிக்காக நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என தெரிவித்துள்ள நிதியமைச்சர் எனினும் இந்த கடனை மூன்று வருட தவணைகளில் திருப்பி செலுத்தவேண்டும்  என தெரிவித்துள்ளார்.

கடன்களை திருப்பி செலுத்துவது தொடர்பில் ஜனாதிபதி விவேகமான மிகவும் நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் செயற்படுகின்றார் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அயல்நாடான இந்தியா தனது நிலைப்பாட்டை தனது செயற்பாட்டின் மூலம் நிரூபித்துள்ளது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அவசியமான உதவிகள் அனைத்தும் பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் வழங்கப்படுகின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் மக்களிற்காக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுகளை கொள்வனவு செய்வதற்காக  ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை வழங்கியுள்ளது குறிப்பாக ஏப்பிரல் புத்தாண்டை கருத்தில்கொண்டு இந்த உதவி வழங்கப்பட்டு;ள்ளது இது 17ம் திகதி முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என தெரிவித்துள்ள நிதியமைச்சர் மூன்று வருட தவணை முறையில் இலங்கை இதனை திருப்பி செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் பிரச்சினைகள் இந்த கடனுதவி மூலம் தீர்க்கப்படுமா என்ற கேள்விக்கு மக்கள்  மக்களின் பிரதிநிதிகள் வர்த்தக சமூகத்தினர் அனைவரும் இதன்காரணமாகவே பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒன்றுபடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடனுதவி மூலம் மக்களிற்கு கிடைக்ககூடிய நன்மைகள் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் வரிசைகள் எரிபொருள் வரிசைகள் இன்னமும் முடிவிற்கு வராததை நான் அவதானித்துள்ளேன் என தெரிவித்துள்ள  நிதியமைச்சர்  பொதுமக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

சில பொருட்கள் விநியோகம் தாமதமானலும் பொருட்களிற்கான உத்தரவை அமைச்சர்கள் வேகமாக உத்தரவிடுவார்கள் எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் வாங்கிய கடன்களை இலங்கை எப்போதாவது திருப்பி செலுத்துமா என்ற கேள்விக்கு நாங்கள் திருப்பி செலுத்துவோம், என அவர் தெரிவித்துள்ளார்.


No comments