பரீட்சைகளும் இலங்கையில் இல்லை!

 இலங்கையில் பாடசாலைகளின் தவணைப் பரீட்சைகள் கடுமையான அச்சிடும் தாள் தட்டுப்பாடு காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.

வினாத்தாள் அச்சிடுவதற்குத் தேவையான அச்சிடும் தாள்கள் இல்லாத காரணத்தினால் தரம் 9, 10, 11 ஆம் ஆண்டுக்கான தவணைப் பரீட்சைகளை பிற்போடுமாறும், சாத்தியமாயின் பாடசாலை மட்டத்தில் ஆரம்பக் கட்ட தவணைப் பரீட்சைகளை நடத்துமாறும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளார். 

ஒவ்வொரு அதிபருக்கும் குறிப்பிட்ட தரங்களுக் கான பரீட்சை வினாத்தாள்கள் அடங்கிய குறுந்தகடு(இறுவட்டு) வழங்கப்பட்டுள்ள போதிலும் அச்சிடும் தாள் தட்டுப்பாடு, அச்சிடும் விலை போன்ற பிரச்சினைகள் காணப்படுவதாக அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments