மருந்தும் எகிறுகிறது!



இலங்கையில் கொண்டாக்ட் லென்ஸ்கள், ஸ்டென்ட்கள், ஒக்சிமீற்றர்கள் மற்றும் குளுக்கோமீற்றர்கள் ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை இன்று (18ஆம் திகதி) இரவு முதல் வெளியிட சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த மருத்துவ சாதனங்களின் விலை 29% உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (என்டிஆர்ஏ) அமைச்சிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இதய சத்திரசிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஸ்டென்ட் ஒன்றின் விலை சுமார் 170,000 ரூபா எனத் தெரிய வந்துள்ளது.
எனினும், 38 வகையான கொண்டாக்ட் லென்ஸ்களின் விலைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு வெவ்வேறு அளவுகளுக்கேற்ப அதிகரிக்க வுள்ளதாகத் தெரிய வருகிறது.
60 வகை மருந்துகளின் விலைகளை 29 வீதத்தால் அதிகரித்து சுகாதார அமைச்சு அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments