உணவகங்களும் மூடப்பட்டுவருகின்றது
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் இலங்கையில்உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இன்று இலங்கையில் நகரங்களில் அதிகளவிலான உணவகங்கள் முற்றாக மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், கடை மூடப்பட்டுள்ளது என எழுதப்பட்ட பதாதைகள் உணவகங்களுக்கு முன்னால் தொங்க விடப்பட்டுள்ளன.
இதே நேரம் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் சில உணவகங்களில் விறகு அடுப்பின் மூலம் உணவு மற்றும் சிற்றுண்டிகள் தயாரிக்கும் நடவடிக்கை இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டில் உணவக உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குவதாகவும் இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment