ஆறு தென்னிலங்கை மீனவர்கள் தமிழக சிறையில்!

 


இலங்கையின் வடக்கு கடலை அண்மித்த பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இந்திய கடலோர காவற்படையினரால் நேற்றிரவு ஆறு தென்னிலங்கை மீனவர்கள் கைதாகியுள்ளனர்.

இதனிடையே கைதான ஆறு இலங்கை  மீனவர்களும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு இன்று அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இலங்கை மீனவர்கள் ஆறுபேர் பயணித்த மீன்பிடி படகு ஒன்று இந்திய கடலோர காவல் படையினரால் நேற்று  மாலை  கைப்பற்றப்பட்டிருந்தது.


No comments