பலியாடாக மறுத்த மன்னார் மீனவர்கள்!இலங்கை அரசு மற்றும் தனது முகவர்கள் ஊடாக தாயக -தமிழக மீனவர்களிற்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க முன்னெடுக்கப்படும் சதிக்கு மன்னார் மீனவர்கள் ஆதரவளிக்க மறுத்துள்ளனர்.

 வடக்கு மாகாண மீனவர் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பும் கடிதத்தில் உடன்பட மறுத்து மன்னார் மீனவ சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

வடக்கு மீனவர்கள்  நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும்  இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமாறும் கோரி வடக்கு மாகாண  மீனவர் சங்க பிரதிநிதிகள் ஒன்றிணைந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பவதற்காக நேற்றைய தினம்  யாழ்ப்பாணத்தில் வடக்கின் நான்கு மாவட்ட மீனவ சங்க  பிரதிநிதிகளும்  அகிலன் கதிர்காமர் மற்றும் சூசைதாசன் போன்றோரிற்கும் இடையில் நீண்ட சந்திப்பு இடம்பெற்று கடிதம் தயார் செய்யப்பட்டது.

இருந்தபோதும் கடிதத்தில் ஒப்பமிட முடியாது எனத் தெரிவித்து கூட்டத்தின் இறுதியில் மன்னார் மீனவர்கள் ஆதரவளிக்க மறுத்து  வெளியேறினர். 

No comments