அமைச்சு போனாலும் சலுகை உண்டு!இலங்கையில் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவுக்கு அமைச்சரவையில் வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

இதற்கான உத்தரவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு பொதுவாக இரண்டு மெய்க்காப்பாளர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள்.

இதன்படி அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு அமைச்சரவை பாதுகாப்பு நீக்கப்பட இருந்த நிலையில், பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

No comments