யாழில் விபத்தில் முன்னணி ஆசிரியர் பலி!

 


யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் கனகசபை பாஸ்கரன்  நேற்றிரவு விபத்தில் மரணமானார்.

கோப்பாய்  இராச வீதி  கிருஸ்ணன் கோவில் சந்தியில் நேற்றிரவு  7 மணியளவில் இடம்பெற்ற விபத்து காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். 

கரவெட்டியில் உள்ள வீட்டிலிருந்து இரவு கல்வியியல் கல்லூரியில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தபோது வீதியில் வெளிச்சம் இன்றி நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன் மோதி விபத்து நேரிட்டதாகத் தெரியவருகிறது.

பாஸ்கரன் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி முன்னாள் ஆசிரியருமாவார்.

No comments