வாசுவும் வெளியேறினார்:கூட்டு சந்திப்பு இன்று!இலங்கையின்  நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தனது அமைச்சுப் பதவியை இன்று (04) இராஜினாமா செய்யவுள்ளார் .

இன்று (04) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திவிட்டு, அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். 

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய இருவரையும் அமைச்சு பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவரும் இராஜினாமா செய்யவுள்ளார் .

அதேவேளை அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவரும் கொழும்பில் இன்று (04) முக்கிய சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளனர்.

அதன்பின்னர், இவ்விருவரும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, அடுத்தக்கட்டம் தொடர்பில் பகிரங்க அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளனர் என அறியமுடிகின்றன

இந்நிலையில்  அமைச்சுப் பதவிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில்  கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தை படமெடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நன்றி தெரிவித்துள்ளார்.


No comments