அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டத்தில்!நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள நிலையில் சம்பளம் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் சுகயீன விடுமுறை போராட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாடாவிய ரீதியில் குதித்துள்ளனர்.

இன்று தமது கோரிக்கைகளை முன்வைத்து 17 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளளதாக அதன் பொதுச்செயலாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்தார்.

சம்பளம் , பதவி உயர்வு, பயணக்கட்டணம் அதிகரிப்பு, அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவையாப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அரச அலுவலகங்களில் பணியாளர்களது வருகை வீழ்ச்சியடைந்துள்ளது.


No comments