ஆட்டிலறி தாக்குதல்கள்: ரஷ்யப் படை எடுப்புக்கு காரணத்தை முன்வைக்கலாம்!


கடந்த இரண்டு நாட்களாக உக்ரைனின் கிழக்கில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் பிரதேசத்தை நோக்கி எறிகணை வீச்சுகள் இடம்பெற்றுள்ளன.

இதனை  உக்ரைனை ஆக்கிரமிக்க ஒரு சாக்குப்போக்கான காரணத்தை தொடர்பு படுத்தலாம் என கவலைகள் எழுந்துள்ளன.

நேற்று மாலையில் பதற்றங்களை தணிவதற்குள் 500க்கும் மேட்பட்ட எறிகணை வெடிப்புகள் நடந்ததாக ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான அமைப்பின் கண்காணிப்பாளர்கள் அறிவித்தனர். ஆனால் இருதரப்பும் எறிகணைகளை நடத்தியதாக கண்காணிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து நோட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பை மேற்கொண்டதுடன் உக்ரைன் வன்முறை ஒரு பரந்த மோதலைத் தூண்டலாம் என்ற அச்சத்தின் மத்தியில் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.

No comments