மார்ச் 2 புடினின் முழுயான இராணுவ வெற்றி இலக்கு: முன்னாள் ரஷ்ய அமைச்சர்


உக்ரைன் மீதான போர் மார்ச் 2 ஆம் நாளுக்குள் முழுமையாக முடிக்கும் வெற்றி இலக்கை ரஷ்ய அதிபர் கொண்டிருப்பதாக ரஷ்யாவின் முன்னாள் துணை வெளியுறுவு அமைச்சர் ஆண்ட்ரி ஃபெடோரோவ் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளார். 

வரும் இரு நாட்களில் எல்லாம் வெளிப்படையாகப் பேசப்படும். வரும் மார்ச் 2 நாளுக்குள் முழுமையான இராணுவ வெற்றி நடவடிக்கைக்கு புடின் உத்தரவிட்டுள்ளார் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

உக்ரைன் தொடர்பான கடுமையான எதிர்ப்பாலும் ரஷ்ய எரிவாயுவை பெரிதும் நம்பியிருக்கும் ஐரோப்பிய நாடுகளின் முடிவாலும் மாஸ்கோ அதிர்ச்சியடைந்ததாக ஃபெடோரோவ் மேலும் கூறினார்.

No comments