ரஷ்யாவில் அணுசக்தி படைகள் தயார் நிலையில்: புடினின் முடிவு பொறுப்பற்ற செயல் என்கிறார் நேட்டோ தலைவர்!


ரஷ்யாவின் அணுசக்திப் படைகளை உச்ச தயார் நிலையில் வைக்குமாறு ரஷ்ய அதிபர் புடினின் எச்சரிக்கை பொறுப்பற்ற செயல் என்று நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறியுள்ளார்.

இது உக்ரைன் மீதான ரஷ்யத் தலைவரின் ஆக்கிரமிப்பை அதிகரிக்கிறது என்று ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறுகிறார்.

ஒரு சுதந்திர, இறையாண்மை கொண்ட தேசத்திற்கு எதிராக போர் தொடுப்பது உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை நடத்துவது நிலைமையின் தீவிரத்தை அதிகரிக்கிறது என்றார்.

இது ஒரு ஆபத்தான முடிவு என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments