அணுசக்திப்படைகளை உச்ச தயார் நிலையில் இருக்க புடின் உத்தரவு!!


ரஷ்யாவின் அணுசக்திப் படைகளை தயார் நிலையில் இருக்குமாறு ரஷ்ய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யாவின் அணுசக்திப் படைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய நிலைக்கு மேற்குலக சக்திகளின் நடத்தையால் தூண்டப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு மேற்குலமே பொறுப்பேற்க வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைப்பாடு நேட்டோ நாடுகளின் தலைவர்களின் ஆக்கிரமிப்பு அறிக்கைகள் மற்றும் ரஷ்யா மீது மேற்கு நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளே புடினின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

இந்த முடிவு ஆக்கிரப்பை நியாயப்படுத்த ரஷ்யாவின் ஒரு பகுதி அச்சுறுத்தல் என்று அமெரிக்கா கூறியள்ளது.

இதேநேரம் இது ஒரு ஆபத்தான முடிவு என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.

அணுசக்கி படைகளை உச்ச தயார் நிலையில் இருக்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் உத்தரவிட்ட முடிவானது மிகவும் ஆபத்தானதாக மாற்றக்கூடும் என்று அமெரிக்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் எச்சரிக்கிறார்.

தவறான கணக்கீடு இருந்தால், விஷயங்களை மிகவும், மிகவும் ஆபத்தானதாக மாற்றலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

No comments