உக்ரைன் அரசாங்கத்தை அகற்றுமாறு புடின் அழைப்பு!!
உக்ரைன் அரசாங்கத்தை அகற்றுமாறு புடின் இன்று வெள்ளிக்கிழமை உக்ரைன் இராணுவத்தினருக்கு வலியுறுத்தியுள்ளார்.
உங்கள் கைகளில் அதிகாரங்களை எடுத்துக்கொள்ளுங்கள். இப்புதிய பயங்கரவாதிகள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், புதிய நாஜி கும்பலுடன் பேசுவதைவிட நாங்கள் உங்களுடன் பேசுவது எளிமையாக இருக்கும் போல் தெரிவிறது என்று உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கியின் அரசாங்கத்தைக் குறிப்பிட்டார்.
மின்ஸ்கில் உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்தது. அதேநேரம் உக்ரைன் ஆயுதங்களை கீழே போட ரஷ்யா அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து ஜெலென்ஸ்கியின் அரசாங்கத்தை ஜனநாயகமாக ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என்று எச்சரித்தார்.
Post a Comment