தலைநகருக்கு ரஷ்யப் படைகள் நுழைவதற்கு தயார்: பேச்சுக்கு அழைத்தது ரஷ்யா!!


ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகர் கீய்வ் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் க்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு தூதுக்குழுவை பெலாரஸுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக கிரெம்ளின் கூறியுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ரஷ்யத் தலைவர் உக்ரேனிய தூதுக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு உயர்மட்டக் குழுவை பெலாரஷ்ய தலைநகர் மின்ஸ்கிற்கு அனுப்ப தயார் என்று கூறினார்.

புடினின் கூட்டாளியான பெலாரஷ்ய அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, அத்தகைய உச்சிமாநாட்டிற்கான நிலைமைகளை உருவாக்குவேன் என்று தன்னிடம் கூறியதாக அவர் கூறினார்.

உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பலமுறை ரஷ்யத் தலைவருடன் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். 

இந்நிலையில் வோர்சோவில் பேச்சுக்கள் நடத்த தயார் என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரைனின் பாதுகாப்பு அதன் அண்டை நாடுகளின் பாதுகாப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. தனால்தான் இன்று முழு ஐரோப்பாவிலும் பாதுகாப்பு பற்றி பேச வேண்டியுள்ளது. 

உக்ரைனில் அமைதி மற்றும் நமது குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பில் நீங்கள் (ரஷ்யா) உட்பட அனைவருடனும் பேச தயாராக உள்ளோம் என தெரிவித்திருந்தார்.

இன்று வெள்ளியன்று ரஷ்யப் படைகள் தலைநகரை சுற்றிவளைத்துள்ள நிலையில் பேச்சுவார்த்தைகளை வலியுறுத்தி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டார்.

நான் ரஷ்ய கூட்டமைப்பின் தலைவருக்கு மீண்டும் ஒருமுறை சொல்ல விரும்புகிறேன். உக்ரைன் முழுவதும் சண்டை நடந்து வருகிறது. மக்கள் உயிரிழப்பைத் தடுக்க பேச்சுவார்த்தை மேசையில் அமர்வோம் என்றார்.

வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நேட்டோ உறுப்புரிமையில் நடுநிலை நிலையை எடுப்பதாக உக்ரைன் உறுதியளிக்கலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.

No comments