2800 ரஷ்யப் படைகள் பலி! உக்ரைன் தெரிவிப்பு!!
இதுவரை நடந்த சண்டையில் 2,800 ரஷ்ய படையினர் கொல்லப்பட்டதாக உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் கூறியுள்ளார்.
உக்ரேனியப் படைகள் சுமார் 80 ரஷ்ய டாங்கிகள், 516 கவச போர் வாகனங்கள், 10 விமானங்கள் மற்றும் 7 உலங்கு வானூர்திகளை அழித்துள்ளன என்று ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
சுயாதீனமாக இதை உறுதி செய்ய முடியவில்லை. ரஷ்யாவும் இதற்கு பதில் பதில் வழங்கவில்லை.
Post a Comment