மாகாணசபை தேர்தலிற்கு தடை நீங்கியது!

 


கலப்பு தேர்தல் முறையும் புதிய தேர்தல் முறையும் அமையும் வரை பழைய முறைமையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவ தற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு நேற்று (24) பாராளுமன்றத்தில் கூடிய போதே அது இடம்பெற்றுள்ளது.

புதிய தேர்தல் முறைமை நிறுவப்படும் வரை மாகாண சபைகளை பழைய முறைமையிலேயே நடத்த வேண்டும் எனவும் தெரிவுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் உரிய தெரிவுக்குழுவை மீண்டும் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தேர்தல்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25மூ ஆக இருக்க பரிந்துரைப் பதும், இளைஞர் பிரதிநிதித்துவத்தை கட்டாய மாக்குவதும் கொள்கையளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட மற்றொரு முன்மொழிவாகும்.


No comments