கெகலியவுக்கு 83 இலட்சம் கடன்!இலங்கை அமைச்சர் கெகலிய தனது வீட்டின் மின்சாரக் கட்டணமாக 83 லட்சம் ரூபாவை பல வருடங்களாக செலுத்தவில்லை என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு, சரண வீதியிலுள்ள அவரது தனிப்பட்ட வீட்டுக்காக பெறப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணங்கள் செலுத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வழங்கப்பட்ட மின்சாரத்துக்கு இந்தத் தொகை செலுத்த வேண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கணக்கைத் தீர்த்து வைக்குமாறு இலங்கை மின்சார சபை அமைச்சருக்கு பல தடவைகள் கடிதம் எழுதியும் இதுவரை நிலுவைத் தொகையை வழங்கவில்லை எனவும் தெரிய வருகிறது.


No comments