ராதாகிருஸ்ணன் இன்று இலங்கை வந்தார்!தமிழகத்தின் திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மைச் செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஸ்ணன் இன்று இலங்கைக்கு வந்துள்ளார்.

இலங்கையில் தமிழரின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு மற்றும் ஒத்துழைப்பு ஆதரவு தொடர்பாகப் பேச்சு நடத்தவே கே.எஸ்.ராதாகிருஸ்ணன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தனது இலங்கை பயணத்தின் பேர்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் உட்பட தமிழ் கட்சிகளது தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளார்.


No comments