உக்ரைனுக்கு உள்ள ஒரே ஒரு வழி நடுநிலமை வகிப்பதே - ரஷ்யாவின் புலனாய்வுத் தலைவர்


உக்ரைன் முன்னோக்கிச் செல்லுவதற்கு உள்ள ஒரே ஒரு வழி நடுநிலைமை மட்மே என்று ரஷ்யாவின் வெளிநாட்டு புலனாய்வுத்துறைத் தலைவர் செர்ஜி நரிஷ்கின் கூறியுள்ளார்.

நேட்டோ தொடர்பான நடுநிலை நிலையை ஏற்றுக்கொள்வது உட்பட, மாஸ்கோவுடன் பேச்சுவார்த்தைக்கு கியேவ் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் பரிந்துரைத்ததை அடுத்து இக்கருத்தினை வெளியிட்டுள்ளார் ரஷ்யாவின் வெளிநாட்டு புலனாய்வுத் தலைவர்.

உக்ரைன் 2008 ஆம் ஆண்டிலேயே இறுதியில் நேட்டோ உறுப்பினராக விரும்பம் தெரிவித்தது. இது ரஷ்யாவின் கோபத்தை ஈர்த்தது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு முன்னதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, உக்ரைனை ஒருபோதும் நேட்டோ உறுப்பினர் ஆக்கக்கூடாது என்று கோரினார்.

நேட்டோவும் வாஷிங்டனும் அத்தகைய உத்தரவாதங்களை வழங்க முற்றிலுமாக நிராகரித்தன.

இதனையடுத்தே உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.

No comments