யாழில் 17 நாள் குழந்தைக்கும் கொரோனா!பிறந்து 17 நாட்களேயான பச்சிளங்குழந்தை உட்பட கிளிநொச்சி, யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளின் நோயாளர் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மாத்திரம் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அன்டியன் பரிசோதனையின் மூலம் அடையாளப்படுத்தப்படுகின்ற தொற்றாளர்களின் விபரங்கள் நாளாந்தம் வெளியிடப்படுகின்ற அறிக்கையில் குறிப்பிடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments