லண்டனில் மது அருந்தகம் இடிந்து விழுந்ததில் பலர் காயம்!!


இங்கிலாந்தில் கிழக்கு லண்டனில் உள்ள மது அருந்தகம் (பார்) கட்டிடத்தின் மேல்தளம் இடிந்து விழுந்ததில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹாக்னி விக் என்ற இடத்தில் டூ இயர்ஸ் என்ற மது அருந்தகம் அமைந்துள்ளது. நேற்று சனிக்கிழமை மாலை 16~:50 மணியளவில் உள்ள  மது அருந்திக்கொண்டிருந்த வேளையில் மேல் தளம் இடிந்து கீழே விழுந்தது.

உடனடியா அவசரசேவைக்கு அழைப்பு வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு நோயளர் காவு வண்டி, தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

சம்பவத்தில் சிக்கிய 7 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மூன்று பேர் படுகாயம் அடைந்ததாகவும், மேலும் 10 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் உதவி மருத்துவர்கள் தெரிவித்தனர். 

4 பேர் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்கள் நோயாளர் காவு உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

No comments