கசிப்பு போத்தல்களுடன் இளைஞன் கைது!


மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கசிப்பு போத்தல்கள், உந்துருளி என்பன காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி உந்துருளி ஒன்றில் பனையறுப்பான் பிரதேசத்தில் இருந்து கரவேட்டி பிரதேசத்துக்கு உரைபை ஒன்றில் 10 போத்தல் கசிப்பை வியாபாரத்துக்காக கொண்டு சென்றபோது குறித்த நபரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் 26 வயதுடைய இளைஞர் எனவும் இவரை நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments