மன்னார் கடலில் 12 இந்திய மீனவர்கள் கைது!


இலங்கை கடற்படையினரால் தலைமன்னார் வடக்கு கடற்பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 2 இந்திய இழுவை படகுகளுடன் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்ட்ட இந்திய படகுகளையும், மீனவர்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளனர்.


No comments