தெற்கிற்கும் ஆப்பு:போராட்டங்களை முடக்கும் கோத்தா அரசு!



இலங்கை அரசு தொழிற்சங்க போராட்டங்களை நீதிமன்றங்களை கொண்டு முடக்க முற்பட்டுள்ளது.

சமன் ரத்னப்பிரிய தலைமையிலான அரச தாதியர் சங்கம் நீதித்துறைக்கு மதிப்பளித்து செயற்படுவதாக தாம் நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த சில நாட்களில் மக்கள் சந்திக்கும் அசௌகரியங்கள் நிறுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அரசாங்க தாதியர் சங்கத்திற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் நிலவும் சட்ட நிலைமையை கருத்திற் கொண்டு சட்ட கட்டமைப்பிற்குள் சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பித்துள்ளதாகவும், அது தொடர்பில் ஆராய்ந்த நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தாதியர் போராட்டம் காரணமாக இலங்கையில் வைத்திய சாலைகள் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments