எந்நேரமும் இருளுள் மூழ்கலாம் இலங்கை!

 
கெவரலப்பிட்டி மேற்கு கடற்கரை மின் உற்பத்தி நிலையமானது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்றிரவு (12) இரவு முதல் செயலிழந்துள்ளதால், அதனை மீண்டும் தேசிய மின் இணைப்புடன் இணைக்க முடியவில்லை.

களனிதிஸ்ஸ சோஜிட்ஸ் அனல்மின் நிலையமும் நேற்று இரவு திடீரென பழுதடைந்து, சீர்செய்யப்பட்டு கணினியில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிபொருள் பற்றாக்குறை காரணமாக துல்ஹிரிய மின் நிலையத்தின் செயற்பாடுகள் நேற்றிரவு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான எரிபொருள் மற்றும் நாப்தாவின் அளவு வேகமாக குறைந்து வருவதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments