12 இந்திய மீனவர்கள் விடுதலை!!


இன்றைய தினம் 12 இந்திய மீனவர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற  நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் குற்றச்சாட்டு பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து குறித்த இரண்டு வழக்குகள் உடனும் தொடர்புபட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும் தலா ஏழு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஆறு மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பிணையில் செல்ல நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. 

கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 13 ஆம் திகதி எல்லை தாண்டிய நிலையில்  மீன் பிடித்துக்கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களையும் அவர்களின் இரண்டு படகுகளையும் கைது செய்த கடற்படையினர் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைத்தனர்.


12 இந்திய மீனவர்களும்   B/202/2022   ,B/203/2022  ஆகிய வழக்குகளுக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் அன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து கடந்த 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11:40 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் எஸ் லெனின்குமார் முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது இதன்போது இன்றைய தினம் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் அன்றைய தினம் குறித்த இரண்டு வழக்குகளுக்கும் குற்றச்சாட்டு பத்திரங்களை தாக்கல் செய்யுமாறும் கட்டளை இடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments