கனடாவில் சுதந்திரப் பேரணிக்கு தலைமை தாங்கிய இரு தலைவர்கள் கைது!


கனடாவில் சுந்திர வாகனப் பேரணிக்கு தலைமை தாங்கிய இரு தலைவர்களை கனேடியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கனடாவின் தலைநகர் ஒட்டாவை நோக்கிய வருகை தந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பாரவூர்திகள் கோன்களை அடித்து தங்களது எதிர்ப்புகளை வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து இரண்டு போராட்ட தலைவர்களை காவல்துறை கைது செய்துள்ளனர்.

கடந்த மூன்று வாரங்களாக நடைபெறும் வாகனப் பேரணியை கலைக்க கனேடிய காவல்துறை முயற்று வருகிறது. நாட்டில் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒட்டாவாவின் பாராளுமன்றத்திற்கு அருகே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்

ஆர்ப்பாட்டக்காரர்களின் உதவிக்கு வருவோரைத் தடுக்கும் வகையில் நகரப் பகுதியின் பெரும்பகுதியை காவல்துறையினர் தடுப்பு வைக்கத் தொடங்கினர்.

No comments