இலங்கை: மரணித்தாலும் நிம்மதியில்லை!
இலங்கையில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியால் எதிர்காலத்தில் நாடு முழுவதும் ஃபோர்மலின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மலர்ச்சாலை வியாபாரிகள் தெரிவித் துள்ளனர்.
நாட்டில் தற்போது போதுமான அளவு ஃபோர்மலின் மட்டுமே இருப்பதாகவும், இதனால் பூக்கடைத் தொழில் எதிர்காலத்தில் சிக்கலுக்குள்ளாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஃபோர்மலின் இறக்குமதி செய்யப் படுகிறது. எரிபொருள் போன்றஅத்தியாவசிய பொருட்களுக்கு டொலர் வழங்கும் முயற்சியில் அரசாங்கம் ஃபோர்மலின் இறக்குமதியை நிறுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர்.
உடல்களை எம்பாமிங் செய்வதில் மாற்று இல்லை என்பதால் ஒரு மாதத்துக்குள் ஃபோர்மலின் இறக்குமதி செய்ய முடியா விட்டால், உடலை எம்பாமிங் செய்யாமல் 24 மணி நேரத்தில் இறுதிச் சடங்கை முடிப்பதைத் தவிர உடலைப் பாதுகாக்க வழியில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
Post a Comment