கோத்தா-ரணில் பேச்சு:ஜக்கியமாகிறது மொட்டுடன் யானை!



முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் இரகசியஉடன்படிக்கையொன்று காணப்படுகின்றது என வெளியாகும் செய்திகளை ஐக்கியதேசிய கட்சி நிராகரித்துள்ளது.

எதிர்காலத்தில் அதிக நாடாளுமன்ற ஆசனங்களை பெறுவதற்காக ஐக்கியதேசிய கட்சியை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுடன் இணைப்பதுதொடர்பில் ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியுடன் இரகசிய உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார் என வெளியான தகவல்களையே ஐக்கியதேசிய கட்சி நிராகரித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில்ஈடுபட்டுள்ளார் இந்த பேச்சுவார்த்தைகளில் ஐக்கியதேசிய கட்சியின் சார்பில் இசினிவிக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் ரணில்விக்கிரமசிங்கவின் அலுவலகம் இந்த தகவல்களை நிராகரித்துள்ளது.

ரணில்விக்கிரமசிங்க ராஜபக்ச குடும்பத்தின் எவருடனும் பேச்சுவார்ததைகளை மேற்கொள்ளவில்லை இசினிவிக்கிரமசிங்க  இதில் ஈடுபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இசினி விக்கிரமசிங்கவிற்கு ஐக்கியதேசிய கட்சி அலுவலகத்தில் அறை எதுவும் இல்லை என தெரிவித்துள்ள ஐக்கியதேசிய கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள்  அவர் கட்சியின் சார்பில் எந்த உடன்படிககையிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளனர்.

ஐக்கியதேசிய கட்சி தற்போது தன்னை கிராமிய அளவில்பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர்கள் இளைஞர்களை அதிகளவில் ஈர்க்கும்நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் ருவான் விஜயவர்த்தன இதற்கு தலைமை தாங்குகின்றார் என தெரிவித்துள்ளன.

இதேவேளை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோசமான தோல்வியடைந்த பின்னர் தன்னை மீண்டும் புதுப்பிக்கும்நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஐக்கியதேசிய கட்சி ஐக்கிய மக்கள்சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பிக்க ரணவக்க மற்றும்  குமார் வெல்கமவுடன் எதிர்கால கூட்டணிகுறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது .


No comments