மூச்சு வருகிறது:எரிபொருளுக்கு டொலர்!



நான்கு நாட்களாக கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்த 37,500 மெற்றிக் தொன் டீசலுக்கு நேற்றிரவு 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் நிறுவனமொன்றில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குறித்த எரிபொருளை கூடிய விரைவில் தரைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனிடையே இலங்கையில் நாடுமுழுவதிலும் மின்சாரத் தடை இன்று அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற செயற்பாடுகளில் மின்தடையால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

வழமையாகப் பாராளுமன்றத்துக்கு செல்பவர்களை பாராளுமன்றத்தின் நுழைவாயில் உள்ள சோதனை நிலையத்திலும், பாராளுமன்ற கட்டட வளாகத்தில் உள்ள சோதனை நிலையத்திலும் சோதனை செய்ததன் பின்னரே, உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த இரு சோதனை நிலையங்களிலும் பாராளுமன்றத்துக்குள் எடுத்துச் செல்லப்படும் பொருள்கள், பைகள் உள்ளிட்டவை ஸ்கேன் இயந்திரத்தின் ஊடாக சோதனை செய்யப்படும்.

எவ்வாறாயினும் மின்தடைக் காரணமாக பாராளுமன்றத்தின் நுழைவாயிலில் உள்ள சோதனை நிலையத்தின் ஸ்கேன் இயந்திரம்  இயங்கவில்லை. இதனால் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள சோதனை நிலையத்தில் மாத்திரமே பாராளுமன்றத்துக்குள் எடுத்துச் செல்லப்படும் பொருள்கள் ஸ்கேன் செய்யப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது.


No comments