இந்தியாவிற்கு பஸில் மீண்டும் காவடி!இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நாளை மறுதினம் மீண்டும் இந்தியா பயணமாகின்றார்.

நிதி அமைச்சராக பசில் ராஜபக்ச பதவி ஏற்ற ஓர் ஆண்டு இடைவெளியில் இடம்பெறும் இந்தியாவிற்கான மூன்றாவது பயணமாகும்.

இம்முறை இடம்பெறும் இந்தியாவிற்கான பயணத்தின்போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்சாவுடன் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் பயணிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் நெருக்கடியால் இலங்கை திணறிவருகின்ற நிலையில் பஸில் மீண்டும் இந்தியா செல்கிறார்.


No comments