ரஷ்யாவின் 3 பில்லியனர்கள் மற்றும் 5 வங்கிகள் மீது தடை விதித்தது பிரித்தானியா


கிழக்கு உக்ரைனின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பகுதிகளுக்குள் படைகளை அனுப்ப விளாடிமீர் புடின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளை பிரித்தானியா அறிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினிற்கு நெருக்கமான பணக்காரர்களான ஜெனடி டிம்சென்கோ, போரிஸ் ரோட்டன்பெர்க் மற்றும் இகோர் ரோட்டன்பெர்க் ஆகிய மூவருக்கும் எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் உள்ள அவர்களின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அவர்கள் இங்கிலாந்து வருவதற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள தனிநபர்களோ அல்லது நிறுவனங்களோ இவர்களுடன் வணிகம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரோசியா, ஐஎஸ் வங்கி, ஜெனரல் வங்கி, ப்ராம்ஸ்வியாஸ் பேங்க் மற்றும் பிளாக் சீ ஆகிய ஐந்து ரஷ்ய வங்கிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. 

உக்ரைனை மேலும் ரஷ்யா ஆக்கிரமித்தால் மேலும் தடைகள் நீடிக்கும் குறிப்பாக ரஷ்ய நிதித்துறையை குறிவைக்கும் நடவடிக்கைகள் தயார் செய்யப்பட்டிருப்பதாகவும்என பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

No comments