சரத் வீரசேகரவின் தனிப்பட்ட பாதுகாவலருக்கு தர்மஅடி!இலங்கையில் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் தனிப்பட்ட பாதுகாவலராகப் பணி புரியும் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் (ஏஎஸ்பி) தாக்கப்பட்டதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மஹரகமவில் உள்ள உதவி பொலிஸ் அத்தியட்சரின் இல்லத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

ஏஎஸ்பியை தாக்கியதாகக் கூறப்படும் அவரது மைத்துனர் சம்பவத்தின் பின்  தப்பி ஓடிவிட்டார்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments