8 வயது சிறுவர்களும் புலிகளை மீள் உருவாக்க முடியுமா?போராட்டம் முடிவுக்கு வந்திருந்த காலப்பகுதியில் 8வயது கூட நிரம்பியிராத சிறார்களை அண்மைக்காலமாக “விடுதலைப்புலிகள் மீளுருவாக்க முயற்சி” என்கின்ற புனைவுக்குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்குகள் கூட தாக்கல் செய்யப்படாது இரண்டு வருடங்கள் கடந்தும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைத்துள்ளன குடும்பங்கள்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பூநகரி முட்கொம்பான் கிராமத்தை சேர்ந்த தாய்மார் வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் இத்தகைய மீள் உருவாக்க குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவதும் சிறை வைக்கப்படுவதும் தொடர்கிறதெனவும் தெரிவித்துள்ளனர்.

அரசியல் கைதிகளது விடுதலைக்காக போராடிவரும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பில் ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர்கள் குறிப்பாக ‘வாழ்வாதார உதவி’ என்ற வகை முறையில் வறுமையின் பிடியில் சிக்கி உழலும் குடும்பங்களை இலக்கிருத்தி ஆசை வார்த்தைகளை அவிழ்த்து விடும் சதிமுகவர்கள், இறுதியில் அப்பாவிச்சனங்களை சிறை வரை கொண்டு சென்றுவிட்டு மாயமாகி விடுகின்றனர் எனவும் தெரிவித்தனர்.

குறிப்பாக கல்விகற்றும் கொண்டிருந்த சிறார்களை 18முதல் 20 வயதிற்கிடைப்பட்டவர்களை புலிகளது மீள் உருவாக்கமென கைது செய்து இரண்டுவருடங்களிற்கு மேலாக கைது செய்து எந்தவித காரணமுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்


வடக்கு கிழக்கு பகுதிகளில் பதட்ட நிலையை தோற்று வித்து அதனை தக்க வைத்துக் கொண்டு கொடிய பயங்கரவாதத்தடைச்சட்டத்தை செழிப்புறச் செய்கிறார்களா என்று கேட்க விளைகின்றோம்.அல்லது ‘புலிகள் மீளுருவாக்கம்’ என்றதான ஒரு போலிப்பிரசாரத்தை பரவச் செய்து தொடர்ந்தும் தமிழர் தாயகப் பிரதேசங்களை முப்படைகளின் முகாம்களாகவே பரிபாலிக்க நினைக்கிறார்களா எனக்கேட்கின்றோம்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கூட இருக்கின்ற இந்தச்சந்தர்பத்தில் இவ்வாறு அடிப்படையற்ற குற்றங்களை காரணம் காட்டி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் சுமார் 117 பேரில் வெறுமனே 27 தமிழ் தைதிகள் மாத்திரம் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். 


அவ்வப்போது சிலரை விடுதலை செய்து சர்வதேசத்தை சாந்தப்படுத்தி சலுகைகளை சுவீகரித்துக் கொள்வதற்காகவே இத்தகைய கைது நாடகங்கள் இடம் பெறுகின்றனவா என்கின்ற சந்தேகம் வலுக்கின்றது.


நடக்கின்ற விடயங்களை அவதானிக்கும் போது ஏதோ சில காரய காரியங்களுக்காக தமிழர்கள் பகடையாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது புலனாகின்றது.


பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டுமென்று, இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் இடித்துரைத்துள்ளார். இவ்வாறிருக்கும் போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இக்கொடிய சட்டத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென பலமாக வலியூறுத்தப்பட்டு வருகிறது.


கடந்த வாரம் ஜனாதிபதி உட்பட வெளிவிவகார அமைச்சர் மற்றும் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோர்இ “பயங்கர வாதத்தடைச்சட்டத்தை பொலிஸார் அவதானமாக கையாள வேண்டும்” என்பதாக கருத்துக்களை கூறிவருகிறார்கள்.


இதனை வெறுமனே பொலிஸாரின் மீது மாத்திரம் பழியை சுமத்தி விட்டு ‘தப்பிக்க முயலும் அரசாக’ மக்கள் நோக்கக் கூடாது என்றால்இ ஏதேனும் ஒரு பொறிமுறையின் கீழ் மீதமிருக்கின்ற அத்தனை தமிழ் கைதிகளையூம் அரசு விடுதலை செய்வதற்கு தயங்கக் கூடாது.


மீளுருவாக்கக் குற்றச்காட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அனேகமானவர்கள் 22- 23 வயதுடைய இளைஞர்களாக இருக்கின்றார்கள். நாட்டில் யூத்தம் முடியூம் போது இவர்கள் 10 வயதிற்குட்பட்டவர்களாகவே இருந்திருக்க முடியும். இவ்வாறு இருக்கையில்இ இவர்கள் தான் “புலிகள் அமைப்பை மீளுருவாக்க முயன்றார்கள்” எனக்கூறி கைது செய்யப்பட்டிருப்பது எந்தளவூக்கு முரண்நகையான விடயம் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.


“ஒரே நாடு ஒரே சட்டம்” என்று கூறத் தலைப்படும் அரசாங்கம் இனச் சமூகப்பிரிவினைக் காட்டாது நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே அகப்பையில் நீதி பகிர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


No comments