டக்ளஸ் பிதற்றுகிறார்?இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி ஊடுருவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில்; தடுத்து வைக்கப்பட்டிருந்த 47 இந்திய மீனவர்கள் இன்று காலை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு விமானம் மூலம் இன்று சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மீனவர்கள் விமானம்  மூலம் அனுப்பி வைக்க தகவலை இலங்கைக்கான ந்தியத் தூதரகம் இன்று காலை வெளியிட்டிருந்தது.

இதனிடையே  இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதை அவரால் பொறுக்க முடியாமல் அவர் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்கிறார்.

மக்கள் ஏன் போராடினார்கள் என்பது மக்களுக்குத்தெரியுமென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மக்களுடைய பிரதிநிதிகளாக நாங்கள் மக்களுடன் சேர்ந்துதான் போராடினோமே தவிர நாங்கள் போராட்டங்களை ஒழுங்கமைக்கவில்லை. இது முற்றுமுழுதாக மக்களுடைய போராட்டங்களாக நடந்தது.

நாங்கள் மக்களுடன் கூட நின்றோம். தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாகச் சொல்லும் ஒரே அமைச்சர் இவர் எனத்  தெரிவித்தார்.


 

No comments