கழிவு தின்னும் பன்றி டக்ளஸ்: சிவாஜி

கொலைகாரக்கும்பலை சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை யுத்தம் முடிந்துவிட்டதாக சொல்லப்படும் 12வருடங்களின் பின்னரும் தேசியத்தலைவரும் புலிகளும் கனவில் கூட வந்த நாள் தோறும் மிரட்டிக்கொண்டிருக்கிறார்களாவென கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் பன்றிகளிற்கு எங்கு சென்றாலும் எதன் மீதோ தான் விருப்பமென்பது போன்றதே அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுமாகுமென தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து வெளியிடுகையில் தலைவர் பிரபாகரன் மரணடைந்து விட்டதாக ஜனாதிபதி முதல் இராணுவ தளபதிகள் மற்றும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் ஆளுக்கொரு விளக்கமளித்துவருகின்றனர்.

இதன் மூலம் அவர்கள் போர்க்குற்றங்களை மூடி மறைக்க முற்பட்டுள்ளனர்.

யுத்தம் நடந்த போது இராணுவத்தளபதியாக இருந்திருந்த சரத்பொன்சேகா தலைவர் யுத்தத்தில் இறுதி வரை போராடி வீரச்சாவடைந்ததாக தெரிவித்துள்ளார்.

அதே கருத்தையே இறுதி யுத்த கால இராணுவத்தளபதியான கமால் குணரட்ணவும் தெரிவித்திருந்தார்.

சிங்கள இராணுவத்தளபதிகள் இவ்வாறு கூற தமிழினத்தில் முளைத்த புல்லுருவியொன்றோ வேறொன்றை கூறுகின்றது.அதுவும் பனை அபிவிருத்தி சங்க கூட்டத்தில் போய் பிதற்றுகின்றது.

தலைவர் சரணடைந்தார் என்று பெயரளவில் வைத்துக்கொண்டாலும் கூனிக்குறுகி கருணாவை ஏன் உலங்குவானூர்தியில் அழைத்துவந்து அடையாளம் காண்பிக்கும் நாடகத்தை நடத்தவேண்டும்.

இன்று வரை கருணாவை அழைத்து சென்றது போல ஒரு சட்டவைத்திய அதிகாரியையோ நீதிபதியையோ அழைத்து சென்று காண்பிக்காதமை ஏன் என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

சிங்கள மக்களை ஏமாற்ற கருணாவை அழைத்துவரும் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இறுதி யுத்த காலத்தில் கைதாகி பனாகொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தேசியத்தலைவரது தாயினையோ அல்லது தந்தையினையோ வைத்து டிஎன்ஏ பரிசோதனையினை முன்னெடுக்க முடியவில்லை.

இதன் மூலம் அரசு எதனையோ திட்டமிட்டு மறைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


No comments