விரைவில் உள்ளூராட்சி தேர்தல்!

இலங்கையில்  பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள் போன்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

“இந்த அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் ஆணையை நாம் பாதுகாத்து பலப்படுத்த வேண்டும். அந்த நோக்கங்களுக்காக நாம் இந்த அரசியல் யாப்பை மாற்ற வேண்டும். நாடாளுமன்றத்தின் தேர்தல் குழுவின் தலைவர் என்ற வகையில், கலப்பு வாக்களிப்பு முறையை ஏற்படுத்தவும், இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் முன்மொழிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எனவே அதனை நிறைவேற்ற குழு விரைவில் கூடுகிறது. எதிர்வரும் நாட்களில் நாம் ஒரு முடிவுக்கு வந்து விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நோக்கி நாட்டை நகர்த்தி கிராம மக்களின் பலத்தை அதிகரித்து கிராம மக்களின் பொது நிறுவனங்களை பலப்படுத்த முடியும் என நம்புகின்றோம்” என்றார்.

நேற்று (20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments