கச்சதீவிற்கு அனுமதி கேட்கிறார் பாலு

கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்பது தொடர்பாக இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுடன் தொலைபேசி வழி பேச்சுவார்த்தை நடத்தியதாக திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். 

நடப்பாண்டில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி தமிழக பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்பு கொண்டு தாமே பேசியதாகவும் கச்சத்தீவு திருவிழாவில் தமிழகத் தமிழர்களை அனுமதிக்க கோரியதாகவும் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். 


No comments