படகு விற்பனை:52 இலட்சம் வருவாயாம்!
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்ததாக கைப்பற்றப்பட்ட 135 இந்தியப் படகுகள் இன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
படகுகளை விற்பனை செய்ததன் மூலம் இலங்கை கடற்றொழில் அமைச்சு சுமார் 52 இலட்சத்துக்கும் மேற்பட்ட வருவாயை பெற்றுள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் காரைநகர் கடற்படைத் தளத்தில்; தடுத்து வைக்கப்பட்டிருந்தன. அவ்வாறு தடுத்த வைத்திருந்த படகுகளே இன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து வருகை தந்த மீன்பிடித்திணைக்கள அதிகாரிகள் 135 படகுகளையும் 52 லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளனர்.
அதேவேளை காங்கேசன்துறை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இந்திய இழுவடைப்படகுகள் நாளை ஏலம் விடப்படவுள்ளது.
இதனிடையே இலங்கை வசமுள்ள பல கோடி மதிப்புள்ள நூற்றுக்கணக்கான தமிழக மீன் விசைப்படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை எதிர்த்து ராமேஸ்வரம்; மீனவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
Post a Comment