விடுதிகளில் 09 பேருக்கு தொற்று!யாழ்.போதனா வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் நோயாளர் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில்,யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 09 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 06 பேர் சத்திரசிகிச்சைக்கு தயாராகியிருந்தவர்கள் என்றும் அதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மருத்துவ அறிக்கை ஊடாக தெரியவந்துள்ளது.

No comments