சிங்கள ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்!சிங்கள ஊடகவியலாளர்   சமுடித்த சமரவிக்கிரமவின் வீட்டின்மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றுகாலை பிலியந்தலையில் உள்ள பத்திரிகையாளர் சமுடித்த சமரவிக்கிரமவின் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த குழுவினர் வீட்டின்மீது கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்   என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments