பட்டத்திருவிழா முடிவு:பாராட்டுக்கள் குவிகின்றன!

காலத்தின் தேவை அறிந்து பட்டத்திருவிழாவை கைவிட்ட ஏற்பாட்டுக்குழுவிற்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

நேற்றைய தினமிரவு பட்டத்திருவிழாவை கைவிடுவதென ஏற்பாட்டு குழுவின் கூட்டத்தின் பின்னர் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா கொரோனா இடர் காரணமாக இடைநிறுத்தப்படுவதாக , ஏற்பாட்டுக்குழு அறிவிக்கப்பட்டிருந்தது. .

வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் வருடாந்திரம் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் பட்டத்திருவிழா இடம்பெறுவது வழமையாகும். அந்த வகையில் இம்முறையில் பட்டத்திருவிழாவை நடாத்த ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்து இருந்தனர். 

அந்நிலையில் , கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்காத நிலையில் , பட்டத்திருவிழாவை நடாத்தும் போது , கொரோனா தொற்று அபாயம் அதிகரிக்கும் என பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்தமையால் , பட்டத்திருவிழாவை இடை நிறுத்துவதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. 

அதேவேளை இம்முறை பட்டத்திருவிழாவிற்கு , விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சே தனது முழுமையான ஆதரவை தெரிவித்து இருந்தமையும் , அதனால் , பல்வேறு தரப்பினரும் ஏற்பாட்டு குழுவிற்கு தமது கண்டனங்களை தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments