நாவற்குழி விபத்து! ஒருவர் படுகாயம்!


யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் பாரவூர்தியும் மகிழுந்து ஒன்றும் மோதியதில் விபத்து இடம்பெற்றது. இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் நேற்றிரவு சனிக்கிழமை (08) நாவற்குழி சந்திக்கும் நாவற்குழி பாலத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மகிழுந்தில் பயணித்தவர் தலையில் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பாரவூர்தியை முந்திச் செல்வதற்கு மகிழுந்து முற்பட்டபோதே, விபத்து நிகழ்ந்தாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments