மேலும் இரண்டு வருடம்: அடிபோடும் கோத்தா!

 


கொவிட்டினால் இழந்த இரண்டு வருடங்களை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பெற்றுக்கொள்ளவேண்டும் என பொதுமக்களிடமிருந்து எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கண்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார் என இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கண்டி தலதாமாளிகைக்கு வழிபாட்டிற்காக சென்றவேளை நான் மக்களுடன் உரையாடிக்கொண்டிருந்தேன் அவ்வேளை  இளைஞர் ஒருவர் முன்வந்து சேர் நீங்கள் கொவிட்டினால்இரண்டுவருடங்களை இழந்துள்ளீர்கள் சர்வஜனவாக்கெடுப்பின் மூலம் ஏன் அதனை பெற்றுக்கொள்ள முடியாது  என கேள்வி எழுப்பினார்  என இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உங்களை எனது ஆலோசகராக்கவேண்டும் எனநான் அவரிடம் தெரிவித்தேன் என குறிப்பிட்டுள்ள இலங்கை ஜனாதிபதி  மக்களிற்கு எனது கஸ்டங்கள் குறித்து தெரிவித்திருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments