வவுனியா இளைஞனைக் காணவில்லை!!


வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இவர் கடந்த மூன்று மாதங்களாக கொழும்பில் தங்கியிருந்து தொழில் புரிந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 6 ஆம் திகதி வவுனியாவில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு செல்வதாக தனது நண்பர்களிடம் கூறிவிட்டு புறப்பட்ட குறித்த இளைஞன் தனது வீட்டிற்கும் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தான் வவுனியாவிற்கு வருவதாக கூறியுள்ளார். எனினும் அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. 

இரண்டு நாட்கள் கடந்தும் குறித்த இளைஞர் வீட்டிற்கும் வரவில்லை. இதனையடுத்து அவரது தாயாரால் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் பாலுசுந்தரம் சுதர்சன் (வயது 20) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார். அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0767700438  குறித்த இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரியப்படுத்துமாறு அவர்களது குடும்பத்தினரால் கோரப்பட்டுள்ளது.

No comments